×

ராஜ்நாத்சிங் தலைமையில் பா.ஜ தேர்தல் அறிக்கைகுழு உபி முதல்வர் யோகி அவுட்: 4 மாநில முதல்வர்கள் உள்பட 27 பேருக்கு இடம்

புதுடெல்லி: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பா.ஜ தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு பா.ஜ தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை கட்சித்தலைவர் ஜேபி நட்டா அமைத்து உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைவராகவும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருங்கிணைப்பாளராகவும், ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல் இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள இந்த குழுவில் மொத்தம் 27 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ஒன்றிய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பூபேந்திரயாதவ், அர்ஜூன் ராம் மெக்வால், கிரண் ரிஜிஜூ, அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திரபிரதான், குஜராத் முதல்வர் பூபேந்தர் பட்டேல், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, சட்டீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், மத்தியபிரதேச முதல்வர் மோகன்யாதவ், மபி முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஒடிசா சார்பில் ஜூயல் ஓரம், பீகார் சார்பில் ரவிசங்கர் பிரசாத், சுஷில் மோடி, உபி சார்பில் துணைமுதல்வர் கேசவபிரசாத் மவுரியா மற்றும் ராஜூவ் சந்திரசேகர், வினோத் தாவ்டே, ராதா மோகன்தாஸ் அகர்வால், மஜிந்தர்சிங் சிர்சா, ஓபி தங்கர், அனில் அந்தோனி, தாரிக் மன்சூர் ஆகியோருக்கு குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ தேர்தல்அறிக்கை தயாரிக்கும் குழுவில் 4 முதல்வர்கள், உபி துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா ஆகியோருக்கு இடம் அளித்து இருந்தாலும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு இடம் அளிக்க இல்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியதால். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இல்லாத கட்சியின் மூத்த தலைவர்கள் தேர்தல் தொடர்பான பிற பணிகளில் இருக்கக்கூடும் என்று பா.ஜ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

The post ராஜ்நாத்சிங் தலைமையில் பா.ஜ தேர்தல் அறிக்கைகுழு உபி முதல்வர் யோகி அவுட்: 4 மாநில முதல்வர்கள் உள்பட 27 பேருக்கு இடம் appeared first on Dinakaran.

Tags : BJP Election Manifesto Committee ,Rajnath Singh ,UP ,Chief Minister ,Yogi ,New Delhi ,BJP ,Defense Minister ,JP Natta ,Lok Sabha ,Rajnathsingh ,Dinakaran ,
× RELATED 2029ம் ஆண்டிலும் மோடியே பிரதமராக...